திங்கள், 26 ஜனவரி, 2009

வழக்கொழிந்த தமிழ் சொற்கள்

 

 

சகோதரி பிரியா அவர்கள் என்னை வழக்கொழிந்த தமிழ் சொற்கள் என்ற பெயரில் பதிவொன்றினை இடுமாறு கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டு இரு நாட்கள் ஆகியும் என்னால் எழுத முடியாமல் போன சூழ்நிலைக்காக வருந்துகிறேன்.

என் இந்த வலைக்குடிலே என் எழுத்தைக் காணாது மாதக் கணக்கில் இருந்து போய் விட்டது.. இதில், இரு நாட்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தாமதம் தானே...!?

 எல்லைக்கோடு வலைக்குடிலில் இப்பதிவினை இடுவதா, அல்லது இதிலிடுவதா எனக் குழப்பம் வந்தபோதும், இங்கேயே இடுவதென முடிவெடுத்தேன்.

ம்… தமிழ்.. வழக்கொழிந்த சொற்கள் இருக்கிறதா…!? நாம் இப்போது பயன்படுத்தும் சொற்களெல்லாம் வள்ளுவன் காலத் தமிழில் இருந்ததா… வள்ளுவன் காலத் தமிழில் நாம் எத்தனை சொற்களை அப்படியே அதன் அர்த்தத்தில் எடுத்துக் கையாண்டு வருகிறோம்..!?

சடாரென கண் முன் வந்து நின்ற சில குறள்களில் முக்கியமான ஒன்று..

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடுஅல்ல மற்றை யவை

இதில் வரும் மாடு என்ற சொல்லின் அர்த்தத்திற்கும், நாம் இன்று இவ்வார்த்தையினைக் குறிக்கும் அர்த்தத்திற்கும் தான் எத்தனை வேறுபாடு..!? வள்ளுவர், செல்வம் என்ற அர்த்தத்தில் மாடு எனக் குறித்திருக்க, நாம் நம் வீட்டிலிருக்கும் நான்கு கால் பிராணியினைக் குறித்து வருகிறோம்.

இது போலவே ’விழுமம்’ என்ற சொல் ’சிறப்பு’ என்ற அர்த்தம் கொண்டு விளங்கியது அன்று. அப்படியொரு வார்த்தை இருக்கிறதா வழக்கில் இன்று..!?

இதுபோலவே


அதியன்’ = ‘சிறந்தோன்

இழுதை’ = ‘அறிவின்மை’ 

ஒல்லை’ =  ‘விரைவில்’ அல்லது ‘பழமைஇதைப் போன்று இன்னும் பலப்பல வார்த்தைகளை இழந்து நிற்கிறோம் நாம் இன்று. இவற்றைப் பற்றி நாம் கலந்துரையாடுவதின் மூலம் இச்சொற்களை வழக்குக்குக் கொண்டு வந்து விட இயலுமா..!? இன்றைய தமிழ் குழந்தைகள் படிப்பது முதல் குடிப்பது வரை ஆங்கிலமாயிருக்க, நாம் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றம் கொண்டு வந்து விட இயலுமா..!?

முடிந்ததைச் செய்வோம். பல நல்ல தமிழ் வார்த்தைகளை அவற்றின் அர்த்தத்தோடு மீட்போம்.

இப்பதிவின் தொடர்ச்சியாய்  திகழ்மிளிர்சுரேஷ், நட்புடன் ஜமால் இவர்கள் மூவரையும் கேட்காமலே இப்பதிவினைத் தொடரும்படி இணைத்து விட்டேன். செய்வார்களென நம்புகிறேன்.

9 கருத்துகள்:

திகழ்மிளிர் சொன்னது…

/இதைப் போன்று இன்னும் பலப்பல வார்த்தைகளை இழந்து நிற்கிறோம் நாம் இன்று. இவற்றைப் பற்றி நாம் கலந்துரையாடுவதின் மூலம் இச்சொற்களை வழக்குக்குக் கொண்டு வந்து விட இயலுமா..!? இன்றைய தமிழ் குழந்தைகள் படிப்பது முதல் குடிப்பது வரை ஆங்கிலமாயிருக்க,/


அருமையான எண்ண அலைகள்

வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் சொன்னது…

சிந்தனை(ச்) சிற்பி ...

அழகான முறைல சொல்லியிருக்கீங்க

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இன்றைய தமிழ் குழந்தைகள் படிப்பது முதல் குடிப்பது வரை ஆங்கிலமாயிருக்க\\

நிதர்சணம்.

புதுகைச் சாரல் சொன்னது…

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்

தமிழ்தினா சொன்னது…

நன்றிகள் திரு. புதுகைச் சாரல்.

திகழ்மிளிர் சொன்னது…

/இப்பதிவின் தொடர்ச்சியாய் திகழ்மிளிர், சுரேஷ், நட்புடன் ஜமால் இவர்கள் மூவரையும் கேட்காமலே இப்பதிவினைத் தொடரும்படி இணைத்து விட்டேன். செய்வார்களென நம்புகிறேன்./

ஏன் நண்பரே
இது என்ன
இலவச இணைப்பா ?
நேரம் கிடைக்கையில்
கண்டிப்பாக பதிவு இடுகிறேன்

வாழ்த்துகள்

தமிழ்தினா சொன்னது…

ஏற்றுக் கொண்டமைக்கு நன்றிகள் நண்பரே...

SUREஷ் சொன்னது…

ஒரு செய்தியாவது சொல்லியிருக்கலாமே

தல......

தமிழ்தினா சொன்னது…

சொல்லத்தான் முயற்சித்தேன்.. சற்று உடல்நிலை சரியில்லை சுரேஷ்.. அதனால்தான்.. எனினும் ஏற்றுக் கொண்டதாகக் கொண்டு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.