புதன், 26 நவம்பர், 2008

நேருக்கு நேர் பேசுதல்.... ஒரு விளக்கம்..

 

கடந்த சில மாதங்களாக, நேருக்குநேர் பேசுதல்(straightforwardness) பற்றிப் புதுப் புது விளக்கங்களைக் கேட்க நேர்ந்தது. இந்த ஒரு வார்த்தைக்கு எப்படி இத்தனை விதமான விளக்கங்கள்...

சிலர் மற்றவர் வருந்தப் பேசுவதையே நேருக்குநேர் பேசுதல் என புரிந்து கொண்டு, அதன்படி நடக்க முற்படுவதைப் பார்க்கையில் வியப்பு மேலிடுகிறது. மற்றவரைப் பாராட்ட நேர்கையில்..... ஒரு தயக்கம், அவர் தனக்குக் கீழானவர் போன்ற ஒரு எண்ணம் தனை அவரை உணர வைத்து, போனால் போகிறது எனப் பாராட்டும் வார்த்தைகள் சொல்லி வைப்பது... இது நன்றாக இருக்கிறது.., ஆனால்.., இன்னும் அப்படியிருந்திருக்கலாம் அல்லது இப்படிச் செய்திருக்கலாம் என்று நீங்கள் சொல்வீர்களேயானால், நீங்கள் எச்செயலைக் குறிக்கிறீர்களோ அதில் நீங்கள் கைதேர்ந்தவர் என்றும், செயலைச் செய்தவர் அதில் சற்று மட்டுப் பட்டுச் செய்திருக்கிறார் என்றும் நீங்கள் உணர்த்த முற்படுகிறீர்கள்.. இது முழுக்கத் தவறான காரியம் அல்ல. உண்மையிலேயே செய்யப்பட்ட செயல் செய்யப்பட்ட விதம் சற்று மட்டுப்பட்டும் இருந்திருக்கலாம்.

 

ஆனால், எங்கே உங்கள் கொடும் குணத்தினை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் என்றால், அதே மனிதரின் தவறினை, அல்லது உங்களுக்குத்  தவறாகப் படுவதினை மிகக் கடுமையாகச் சுட்டிக் காட்டும்போதுதான்.. பாராட்டுதலின் அளவு சற்று மட்டுப் படுகையில், கடுமை காட்டலின் போது மட்டும் குரல் ஓங்கி ஒலிப்பது ஏன்!?

கேட்டால் எனக்கு ஒளித்து மறைத்துப் பேசத் தெரியாது.., நான் எதையும் நேருக்கு நேர் சொல்பவன் அல்லது சொல்பவள் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது. உங்களுக்கான நடத்தைச் சான்றிதழை மற்றவர் தாம் வழங்க வேண்டுமே அன்றி, உங்களுக்கு நீங்களே அல்ல..

இரு விதமான வாக்கியங்களை நான் சமீபத்தில் அதிகமாய் காண நேர்ந்தது.

1. " Don't get annoyed for calling spade as a spade "....

அதாவது ஸ்பேடை ஸ்பேட் என்று அழைப்பதற்காக எரிச்சல் படாதே.., நான் அப்படித்தான் அழைப்பேன்.. மறைத்து வைக்க மாட்டேன் என்பது அவ்வாக்கியத்தின் அர்த்தம்.

இதற்கு பதில்...

 

" Don't call spade as a spade, if you are not in the game "..

 

நீங்கள் விளையாட்டிலேயே இல்லையெனில், ஸ்பேடை ஸ்பேட் என்று அழைக்காதீர்கள்.. அது மற்றவர் தப்பாட்டம் ஆட வழிவகுக்கும்..முகத்துக்கு நேராய் புகழ வேண்டாம்.. முகத்துக்கு நேராய் வருத்தும் சொற்களை உபயோகப் படுத்தாதீர்கள்.. தலைக்கணம் தலைக்கு ஏறிவிட்டால், நம் கணிப்புகள் தவறாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம்..

 

2. " உண்மை பேசுவதாகக் கூறுபவர்கள், மற்றவர் துணையை நாடுகின்றனர்.. அநாவசியமாக மற்றவர் பெயரை நுழைக்கின்றனர் "..

 

மற்றவர் பெயர் நுழைக்கப்படுகிறதா அல்லவா என்பதல்ல, தேவையானது.. நாம் நடுநிலைத் தன்மையோடு யோசிக்கிறோமா என்பதே முக்கியம்.. நாம் நம் நடுநிலைத் தன்மையை இழக்கும்போது, ஏதேதோ காரணங்கள் கூறி மற்றவர் கூறும் நியாயங்களைப் பற்றிய சிந்தனைகள் தனை கண்களை விட்டு, அல்லது காதுகளை விட்டு உள் கொண்டு செல்ல மறுக்கிறோம்.. இதில் அவர் பெயர் நுழைக்கப் பட்டுவிட்டதால், இக்கருத்தினை விட்டு விடுவோம் என்று.., சொல்லப்படும் நியாயம் தனைக் கைவிடக் காரணங்கள் தேடி ஒதுக்குகிறோம். ஏனென்றால், நாம் முன்னர் செய்து வைத்த முடிவுகளே சரியாயிருக்கும்.. அதற்கு மாற்றாய் உண்மை இருக்கவே இருக்காது என்ற பிடிவாதமான எண்ணம் ஒரு காரணம். அதிலும், நாம் முடிவெடுத்த பிறகு அதிலிருந்து மாறுவதா என்ற அகங்காரமும் ஒரு காரணம்.

 

ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தால், சரியான பார்வைகள் ஒருபுறமும், தவறான பார்வைகள் மறுபுறமும் இருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், தொடர்ந்து வாக்குவாதங்கள் நிகழுமேயானால், அதற்கு சரியான பார்வை கொண்டிருப்பவரும் சேர்ந்தே பொறுப்பாவர். அதற்கு ஒருவரின் பார்வை தவறானது என்பது மட்டும் காரணமாய், அவர் மடுமே வாக்குவாதம் நீடிக்கக் காரணம் என மற்றவரைக் குறை கூறல் கூடாது.. சில நேரங்களில், நாமறியாத உண்மை அத்தவறான பார்வையில் புதைந்திருக்கலாம்.. ஏனென்றால், இன்றைக்கு உலகமே பெரும்பாலும் தவறுகளின் கூடாரம்..

 

ஆக மொத்தத்தில், அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதை கண்ணால் கண்டு பதில் சொல்வவர் அல்ல நேருக்குநேர் பேசுபவர்.. கண்ணால் கண்டதை, அல்லது காதால் கேட்டதை மனதிற்கு எடுத்துச் சென்று, யோசித்து, பிறகு ஒரு முடிவெடுத்து, அதனைப் பக்குவமாய் எடுத்து சொல்பவர்தாம் நேருக்குநேர் பேசுபவர்..

 

மற்றவரெல்லாம், தயவுசெய்து உங்கள் நேருக்குநேர் கொள்கைகளைக் கைவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் உண்மையில் நேருக்குநேர் பேசுபவரல்ல.. நேருக்குநேர் வதைப்பவர்... அதனைப் புரிந்து கொள்ளுங்கள்..

 

 

 

5 கருத்துகள்:

janakey@gmail.com சொன்னது…

ரொம்பவே நல்லா எழுதியிருக்கீங்க தமிழ். ஒருத்தரு மனசையும் நம்மால புரிஞ்சுக்க முடியல. உண்மையாவே சில சமயம் நினைக்கும்போது என்னடா உலகம் நு தோணுது. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கமும் பார்க்கனும்னு ஏன் நிறய பேருக்கு புரிய மாட்டேங்குதுன்னு தெரியல. அது அடுத்தவங்களை எவ்வளவு பாதிக்கும்னு அவங்க தெரிஞ்சு தான் பண்றாங்களா ன்னு நமக்கு தெரியல. மொத்ததுல ரொம்ப நல்ல ஒரு பதிவு தமிழ்......

SUREஷ் சொன்னது…

அண்ணா, எங்கியோ போய்டீங்க

Priya Kannan சொன்னது…

thamizh neega sonnathu enakku ippo puriyuthu.
அதற்கு ஒருவரின் பார்வை தவறானது என்பது மட்டும் காரணமாய், அவர் மடுமே வாக்குவாதம் நீடிக்கக் காரணம் என மற்றவரைக் குறை கூறல் கூடாது.. சில நேரங்களில், நாமறியாத உண்மை அத்தவறான பார்வையில் புதைந்திருக்கலாம்.. ஏனென்றால், இன்றைக்கு உலகமே பெரும்பாலும் தவறுகளின் கூடாரம்..//

sathiyama varthaigal.

மற்றவரெல்லாம், தயவுசெய்து உங்கள் நேருக்குநேர் கொள்கைகளைக் கைவிடுங்கள். ஏனென்றால் நீங்கள் உண்மையில் நேருக்குநேர் பேசுபவரல்ல.. நேருக்குநேர் வதைப்பவர்... அதனைப் புரிந்து கொள்ளுங்கள்..


நேருக்குநேர் வதைப்பவர் - ithaithan niriya per sejukittu irukkangale?


thamizh nalla nalla pathivu

Priya Kannan சொன்னது…

nalla pathivu thamizh. mm enna seiyyarathu naan nerukku nerai en manathil pattathai sollaren aduthavangalai kasta padutharanva jasti agitte thane irukkanga. nerukku ner vathaipavar nalla varthai thamizh

தமிழ்தினா சொன்னது…

நன்றி ஜாஸ், சகோதரி ப்ரியா.

நன்றிகள் "தம்பி" சுரேஷ்... இங்கே இருக்குற மக்களைப் பார்க்கறோம்லப்பூ...

அவங்களைப் பற்றி எழுதி எங்கேயோ எப்டிப்பூ போறது...!?