வியாழன், 9 ஏப்ரல், 2009

ஜகதீஷ் டைட்லரும்.., பிரபாகரனும்..!

வழக்கம் போல் நேற்றிரவு என்டிடிவி வைத்து செய்திகள் பார்த்துக் கொண்டிருந்தேன். தலைப்பு : ஜகதீஷ் டைட்லரைப் பற்றியது.. காங்கிரஸ் அவருக்கு தேர்தலில் நிற்க இடம் தருவது சரியா..!? அவர், சீக்கியர்கள் படுகொலை சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களில் ஒருவர் என்பது சரிதானா..!? யார்தான், அக்கொலைகளுக்குப் பொறுப்பு என்பதாக விவாதங்கள் போய்க் கொண்டிருந்தது...!


ஊடக நிருபர் ஒருவர் மிகப் பரிதாபமாக, சிபிஐ தரப்பிலிருந்து, டைட்லருக்கு எதிராக ஆதாரங்கள் இல்லையென்று சொல்லப்பட்டபோது, ஒரு கேள்வியினை எழுப்பினார்... 3000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.. அதற்கு யாராவது காரணமாக இருந்திருக்கத்தானே வேண்டும்..!? அது யார்..!? என...!நானாவதி கமிஷன் டைட்லரை குற்றவாளியாய் காண்பிக்க, சிபிஐ, அவர் குற்றமற்றவர் அல்லது குற்றம் நிரூபிக்கப் படாதவர் என்கிறது..!


25 வருடங்கள் போய்விட்டன. இன்னும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கப்படவில்லை.. ஜகதீஷ் டைட்லர் போன்றவர்கள் இன்னும் எத்தனைக் காலம் உயிரோடு இருந்திடப் போகிறார்கள்..!? அவர்கள், தண்டிக்கப்பட வேண்டியவ்ர்கள் என்று இன்னும் சில ஆண்டுகளில் தீர்ப்பு கிடைக்குமாயின், அவர் உயிரோடு இருந்து அந்தத் தீர்ப்பினைப் பெறுவாரா.. மனம் வருந்துவாரா..!? அவர் இயற்கையாக இறந்து விட்டார் எனில், அதன் பிறகு அவர் அக்குற்றங்களுக்குப் பொறுப்பு எனக் கண்டறிந்து என்ன பலன்..!?


அப்படியானால், மற்ற குற்றவாளிகள் மட்டும் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்..!? அவர்களையும் இதே போல் சுதந்தரமாக உலவ விடலாமே..!? 


ஆனால், பிரச்சனை இன்னும் கூட பெரிது..! ஈராக்கில், ஜார்ஜ் புஷ் செருப்படி வாங்கியது போல், தமிழரான ப. சிதம்பரம், டைட்லருக்கு, சிபிஐ அளித்த நற்சான்றிதழ் பத்திரத்தினை வாசித்ததினால், செருப்படி விழுந்திருக்கிறது..! ப.சி செருப்படிக்குத் தகுதியானவரா என்பதை பிறகு பார்ப்போம்..!


ஆனால், இந்நிகழ்வுகளில், ஜகதீஷ் டைட்லர், பல்ராம் ஜாக்கர், சஜ்ஜன் குமார், மற்றும் சிலர் மட்டுமே பொறுப்பாவார்களா..!? காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துக்கு எப்பொறுப்புமே இல்லையா..!?


குஜராத்தில், கலவரங்களைத் தொடர்ந்து தூண்டிவிட்டுப் பேசிய அரசியல்வாதிகள் இன்னும் பதவியில்தான் இருக்கிறார்களில்லையா..!? அவர்கள் சார்ந்த கட்சிக்கு தார்மீகப் பொறுப்புகளில்லையா..!? என்றைக்கு இந்த தேசம், குடிமகன்களின் உயிருக்கு மரியாதை தரப் போகிறது..!? 



இறந்த சீக்கியர் 3000 பேரில் எத்துனை மன்மோகன் சிங்குகள் இழந்திருக்கும் வாய்ப்புகள் உண்டோ..!? ஏன், அவர்களில் ஒரு அப்துல் கலாம் கூட கிட்டியிருகலாம்.. வாய்ப்பில்லை என மறுக்க முடியுமா..!? அப்படியானால், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், எந்தவொரு அரசியல்வாதிக்கும் சமமானவன் அல்லவா..!?


உலகில் சாதித்தவர்களின் உயிர் மட்டுமேதான் பெரிது, சாதிக்காதவர் உயிரைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என்றால், அதை விடக் கோமாளித் தனம் ஏதுமில்லை..! இன்றைக்கு சாதிக்காதவனாக ஒரு குடிமகன் இருக்கலாம்.. ஆனால், சோனியாவோ, அத்வானியோ அவர் உயிருக்குத் தரும் மரியாதையினை ஒவ்வொருவரும் தன் உயிருக்குத் தரக் கூடாதா என்ன..!?


எனில், டைட்லர் போன்ற அரசியல்வாதிகளால் கொல்லப்பட்ட உயிர்களுக்கு கிடைக்கும் நியாயம் என்ன..!? ராஜிவ்காந்தியின் உயிர் மட்டும்தான் உயிரோ..!?


டைட்லரோ, மற்ற காங்கிரஸ் தலைவர்களோ தெருவிலிறங்கி கத்தியும், துப்பாக்கியும் தூக்கிக் கொண்டு துரத்தவில்லை என்று சொன்னால், கொலைகளை நேரடியாக செய்தவர்களை மட்டும் தண்டித்தால் போதுமா..!?


அப்படியானால், ராஜிவ் கொலையினை செய்த தாணு அங்கேயே மடிந்ததாக ஞாபகம்.. அவருடன் திட்டத்தில் இருந்த சிவராசனும் கூட மடிந்து போனதாகத்தான் செய்தி... பிறகெதற்கு பிரபாகரன் தேடல்..!? தமிழகத்தில் நிகழ்ந்த ராஜிவ் கொலைச் சம்பவத்திற்கு ஈழத்திலிருக்கும் பிரபாகரன் பொறுப்பாக முடியுமானால், தங்கள் வீடுகளுக்குள்ளிருந்து ஒரு இனத்தின் மீதே வெறுப்பு விதை தூவிய, தூவும் அரசியல் தலைவர்கள், நிகழும் நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக மாட்டார்களா..!?


பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த தலைவர்களையெல்லாம் மட்டும் விட்டு விடலாமா..!? பிரபாகரன் கூட, ராஜிவ் கொலை நிகழ்ந்துவிட்ட ஒரு தவறு எனச் சொன்ன ஞாபகம்.. ஆனால், ராஜிவோ சீக்கியர்கள் படுகொலைகள் வெகு சாதாரணம் என்றல்லவா சொன்னார்..!? இதோ, காந்தி குடும்பத்தின் இன்னொரு இளம் வரவு, சிறுபான்மையினரைப் பற்றி எப்படிப் பேசியிருக்கிறது..!? வருண்காந்தி இன்றைக்கு செய்தது தவறு என்றால், ராஜிவ் அன்றைக்கு சொன்னவை மட்டும் எப்படி சரி..!? ராஜிவ்தான் இன்றைக்கு இல்லையே என்றால்.., ராஜிவின் பேச்சுக்குப் பிறகு அன்றைக்கே காங்கிரஸ் என்ற கட்சி இல்லாமல் நாட்டின் அடிப்படை சட்டமானது, அதனைத் தகுதியிழப்பு செய்திருக்க வேண்டும்..! வன்முறைகளைத் தூண்டிவிடும் அரசியல் தலைவர்களைக் கொண்ட கட்சிகள் கலைக்கப்பட்டே தீர வேண்டுமாய் ஒரு சட்டம் என் கனவில் தான் நிறைவேற வேண்டும் என நினைக்கிறேன்..


நம் நட்டு சட்டங்கள் எப்போது திருத்தப்படும்..!? ( வாய்ப்பே இல்லா கனவு.. ) ஒரு அரசியல் கட்சியின் அடிமட்டத் தொண்டன், கட்சி சார்பாக செய்ய்ம் கொலைகளுக்கு கட்சியின் தலைமையே பொறுப்பேற்க வேண்டுமாய்.. குறைந்தபட்சம், அந்தக் கட்சியின் அரசியல் செய்யும் தகுதியிழப்பு என்ற தண்டனையாவது கிடைக்காதா..!?

.

3 கருத்துகள்:

சங்கு-தமிழன் சொன்னது…

I am aligning with you 100%

What we are going to do for this???????

இரா. மேகநாதன். சொன்னது…

//காங்கிரஸ் தலைவர்களோ தெருவிலிறங்கி கத்தியும், துப்பாக்கியும் தூக்கிக் கொண்டு துரத்தவில்லை என்று சொன்னால், கொலைகளை நேரடியாக செய்தவர்களை மட்டும் தண்டித்தால் போதுமா..!?


அப்படியானால், ராஜிவ் கொலையினை செய்த தாணு அங்கேயே மடிந்ததாக ஞாபகம்.. அவருடன் திட்டத்தில் இருந்த சிவராசனும் கூட மடிந்து போனதாகத்தான் செய்தி... பிறகெதற்கு பிரபாகரன் தேடல்..!? தமிழகத்தில் நிகழ்ந்த ராஜிவ் கொலைச் சம்பவத்திற்கு ஈழத்திலிருக்கும் பிரபாகரன் பொறுப்பாக முடியுமானால், தங்கள் வீடுகளுக்குள்ளிருந்து ஒரு இனத்தின் மீதே வெறுப்பு விதை தூவிய, தூவும் அரசியல் தலைவர்கள், நிகழும் நிகழ்வுகளுக்குப் பொறுப்பாக மாட்டார்களா..!?

பிரபாகரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொன்னால், இந்த தலைவர்களையெல்லாம் மட்டும் விட்டு விடலாமா..!? பிரபாகரன் கூட, ராஜிவ் கொலை நிகழ்ந்துவிட்ட ஒரு தவறு எனச் சொன்ன ஞாபகம்.. ஆனால், ராஜிவோ சீக்கியர்கள் படுகொலைகள் வெகு சாதாரணம் என்றல்லவா சொன்னார்..!?//

ராஜிவ் சொல்லி சீக்கியர்கள் படுகொலை நிகழவில்லை, "ஒரு ஆலமரம் விழும்போது சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும்" என்று இந்திராவின் மரணத்தைப் பற்றி சொன்னார்.சீக்கியர்களை இந்திய மக்களே தாக்கினார்கள், ஆனால் பிரபாகரனின் செயல்கள் அப்படி அல்ல. பிரபாகரன் திட்டம் தீட்டி அவர் ஆட்களை அனுப்பி நிகழ்த்தப்பட்ட படுகொலைதான் ராஜிவின் மரணம்.

ஆகவே பிரபாகரனையும் ராஜிவையும் ஒன்றாக இணைக்காதீர்கள்.
பிரபாகரனின் மரணம் வருத்தபடகூடிய செயல் அல்ல, இது கட்சி சார்பற்ற ஒர் இந்தியனின் உண‌ர்வு.

ஓர் குறள் நினைவுக்கு வருகிறது.
"பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா‍ ‍
பிற்பகல் தாமே வரும்"

தமிழ்தினா சொன்னது…

வணக்கங்கள் திரு. மேகநாதன் அவர்கட்கு...,


உடல்நலமின்மையால் தொடர்ந்து எழுத முடியாது இருந்த என்னை மீண்டும் எழுதத் தூண்டியமைக்கு மிகுந்த நன்றிகள்.

உங்களுக்குள்ளிருக்கும் பல முரண்பாடுகள் கண்டு வியக்கிறேன். உங்கள் நிலைப்பாட்டினடிப்படையில் உங்கள் அரசியல் சார்பு நிலை பற்றியும் சிந்திக்கிறேன்

நீங்கள் இறுதியாக முடித்திருக்கும் குறளைப் பற்றி சிந்தித்துதான் எழுதியிருக்கிறீர்களா என்பதைத் தாங்களே சிந்தியுங்கள். அடிப்படையிலேயே தவறான ஒரு குறளினை இங்கு மேற்கோளிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். குறள் தவறானதல்ல. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடமும், குறிப்பிடத் துடித்தக் கருத்தும் தான் தவறு.

உங்கள் கருத்துக்கான பதிலோடு புதிய தலைப்பில் உங்களைச் சந்திக்கிறேன். இங்கே கருத்தாக மட்டும் வைக்கப்பட்டால், கண்டுகொள்ளாமல் விடப்படலாம் என்பதாலேயே புதிய தலைப்பிட்டு எழுத நினைக்கிறேன்.

இப்படிச் சொல்வதால், செருக்கு பிடித்தவன் என்று எண்ணிடல் வேண்டாம். எத்தனைத் தவறான கருத்தினை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள், இன்னும் பல தோழர்கள் கொண்டிருக்கக் கூடும் என்பதை எடுத்துரைக்க நீங்கள் எனக்களித்த வாய்ப்பாக நான் கருதுகிறேன்.

கருத்தில் எவ்வாறாயிருப்பினும், இங்கு வருகை தந்து உங்கள் கருத்தினை இயம்பி, மேலும் இது போல் தவறாக எண்ணமிட்டுக் கொண்டிருப்பவர்க்கு எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை வழங்கியமைக்கு மீண்டும் மீண்டும் நன்றி பாராட்ட நான் கடமைப் பட்டிருக்கிறேன்.

அடுத்தத் தலைப்பில் சந்திப்போம். அங்கே உங்கள் கருத்தினை நிச்சயம எதிர்பார்க்கிறே